தாமரைக்குளம் பதியில் சித்திரை திருவிழா

   ஐம்பதியில் ஒன்றான தாமரைக்குளம் பதியில் சித்திரை திருவிழா வரும் வெள்ளிக்கிழமை  (19/04/19) அன்று திருகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.



     ஐம்பதியில் அகிலத்திரட்டு அம்மானை அருளிய தாமரைக்குளம் பதியில் சித்திரை மாதத் திருவிழா வரும் சித்திரை மாதம் 6 தேதி வெள்ளிக்கிழமை (19/04/19)  அன்று காலை 6 மணிக்கு  கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள் திருவிழா நடைபெற உள்ளது.

     விழாவின் முக்கிய நிகழ்வான கலிவேட்டை சித்திரை மாதம் 13 ஆம் தேதி‌ வெள்ளிகிழமை (26/04/19) அன்று நடைபெற உள்ளது.  திருத்தேரோட்டம் சித்திரை மாதம் 16-ம் தேதி திங்கட்கிழமை (29/04/19) அன்று நடைபெற உள்ளது.

     திருவிழா நாட்களில் அய்யா பவனி வரும் வாகனங்கள்


  • முதல் திருநாள் (19/04/19) அன்று அய்யா தொட்டில் வாகன பவனி.
  • இரண்டாம் திருநாள் (20/04/19) அன்று அய்யா தாமரைப்பூ வாகன பவனி
  • மூன்றாம் திருநாள் (21/04/19) அன்று அய்யா அன்ன வாகன பவனி
  • நான்காம் திருநாள் (22/04/19) அன்று அய்யா சர்ப்ப வாகன பவனி
  • ஐந்தாம் திருநாள் (23/04/19) அன்று அய்யா கருட வாகன வானம்
  • ஆறாம் திருநாள் (24/04/19) அன்று அய்யா தொட்டில்  வாகன பவனி
  • ஏழாம் திருநாள் (25/04/19) அன்று அய்யா பூஞ்சப்பர வாகன பவனி
  • எட்டாம் திருநாள் (26/04/19) அன்று கலி வேட்டை மற்றும் அய்யா குதிரை வாகன பவனி.
  • ஒன்பதாம் திருநாள் (27/04/19) அன்று அய்யா அனுமன் வாகன பவனி.
  • பத்தாம் திருநாள் (28/04/19) அன்று அய்யா சப்பர வாகன பவனி 
  • பதினொன்றாம் திருநாள் (29/04/19) அன்று திருத்தேரோட்டம்.

அனைவரும் வருக !

அய்யா வைகுண்டர் அருள் பெறுக!

அய்யா உண்டு


Post a Comment

0 Comments