அய்யா வழி வழிபாட்டில் சில விளக்கங்கள்

         அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி வழிபாட்டில் சில விளக்கங்கள்




அய்யா வைகுண்டரிக்கு சிலை இல்லாதது ஏன் ?

              அய்யா வைகுண்டர் கடவுளின் அவதாரம்,கடவுளை எப்படி படமாக வரைய முடியும்? சிலையாக உருவகப்படுத்த முடியும்?

               அய்யா வைகுண்டரின் அவதார காலத்தில் அவரது உருவத்தை பல தடவை வரைய முயன்றனர் மக்கள்.

              ஆனால் அய்யா வைகுண்டர் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி தோன்றினார்.கடைசி வரை அவர் உருவத்தை வரையவே இயல வில்லை. 

             கலியுகத்தில் அய்யா வைகுண்டர் நிகழ்த்தி காட்டிய மிகப்பெரிய அற்புதங்களில் இதுவும் ஒன்று.


கண்ணாடி வழிபாடு ஏன் ?

              உனக்குள்ளே கடவுள் உள்ளர் என்பதை உணர்த்துவே இந்த வழிபாடு முறை.


தலைப்பாகை கட்டுவது ஏன் ?

              எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றார் அய்யா.துண்டை இடுப்பில் கட்ட நீ யாருக்கும் அடிமை இல்லை மகனே என்றார்.

                எனவே,தான் அய்யா வழி பிள்ளைகள் கம்பிரமாக தலைப்பாகை கட்டுகிறார்கள்.


மாப்பு கேட்பது ஏன் ?

                மாப்பு என்றால் நிறையபேர் மன்னிப்பு கேட்பதாக அர்த்தம் என்று நினைத்து
கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அது தவறு.

                 மாப்பு என்றால் சிறப்பு என்று பொருள்.அய்யா மாப்பு தரனும் என்றால் அய்யா எங்களுக்கு சிறப்புகள் சேர்க்கனும் என்று அர்த்தம்.


அய்யா வழி திருமணங்களில் மணமக்கள் தெற்கு நோக்கி அமர்வது ஏன் ?


             தென் திசையில் தான் பத்ரகாளி தாய் உள்ளார்.நாம் எல்லாம் பத்ரகாளி பிள்ளைகள்.எனவே தான் தென் திசை நோக்கி திருமணம் நடத்தப்படுகிறது.

             அதுபோலவே,ஏழு கன்னிமார்களும் அய்யாவை திருக்கல்யாணம் செய்ய வேண்டி தெற்கு தேக்கி தவசிருந்து அய்யாவை திருக்கல்யாணம் செய்து கொண்டார்கள்.

               இதன் காரணமாக அய்யா வழி திருமணங்கள் தெற்கு திசை நோக்கி நடத்தப்படுகின்றன.


வடக்கு நோக்கி அடக்கம் ஏன்?


              வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் ஒருவரை பூமிக்குள் வைப்பதன் மூலம்,அவர் சாகவில்லை தவம் இருக்கிறார் என்று கருதப்படுகிறது.

                 கலியுகம் முடித்து தர்மயுகத்தில் வரும் அய்யா வடக்கு திசை நோக்கி தவம் இருக்கும் தம் பிள்ளாகளை நிச்சயம் எழுப்பி ஆட்சி புரிவர்.

அய்யா உண்டு

Post a Comment

0 Comments