மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை


பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை : 





  • வாஜ்பாய் கனவை நினைவாக்கும் வகையில் நதிகள் இணைப்பு  திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நதிகள் இணைப்புக்கு  தனி ஆணையம் உருவாக்கப்படும்.
  • 2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித் தரப்படும்.
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுப்படும்.
  • சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வட்டி இல்லாமல் ரூபாய் ஒரு லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன் வழங்கப்படும்.
  • தீவிரவாதம் வேரோடு அளிக்கப்படும் வரை  தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.
  • பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்டும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.
  • சபரிமலையில் பெண்கள் அனுமதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கட்டுரைகள் உருவாக்கப்படும்.
  • 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
  • கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துக்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்.
  • ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்.
  • மாநில காவல்துறை நவீனமயமாக கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
  • காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டம் 370 ரத்து செய்யப்படும்.
  • முத்ரா கடன் திட்டம் மூலம் 17 கோடி தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 30 கோடியாகும் உயர்த்தப்படும்.
  • 2020க்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக பைபர் இணைத்தள வசதி வழங்கப்படும்.
  • அனைத்து மாநிலங்களுடன்  ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள்  மேலும் எளிதாக போடும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
  • நாடு முழுவதும் மத்திய மாநிலங்களிலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.


Post a Comment

0 Comments