சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ, இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் அய்யா வழி முறை படி தரிசனம் செய்தார்.
தலைமைப்பதிக்கு பசு மற்றும் கன்று தானமாக வழங்கினார் டிடிவி தினகரன்.
பின் செய்தியாளர்களை சந்தித்த, டிடிவி தினகரன் தேர்தல் அரசியல் காரணமாக தலைமைப்பதிக்கு வரவில்லை என்றார்.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு புரட்சி தலைவி அம்மா அளித்த வாக்குரிதிகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார் டிடிவி தினகரன்.

0 Comments