எதிர்த்து போட்டியிட வேட்பாளர் இல்லை அன்ன போஸ்ட்டாக வெற்றி பெற்ற பாஜக

அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிட   வேட்பாளர்  இல்லை அன்ன போஸ்ட்டாக வெற்றி பெற்ற பாஜக.



       அருணாச்சலப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலிலும்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற உள்ளது.


      இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் சந்திக்காமல் அன்ன போஸ்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


     பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 'சர் கேண்டோ ஜீனி ' என்பவர் கிழக்கு அலோ தொகுதியிலும் , 'தபா தேடிர் 'என்பவர் யாச்சுழி தொகுதியிலும் அன்ன போஸ்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

        இதன் மூலம் தேர்தலை சந்திக்காமலேயே பாரதி ஜனதா கட்சியை வெற்றி கணக்கை துவங்கி உள்ளது.
     

Post a Comment

0 Comments