சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் திரு வசந்த குமார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து, இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியின் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளராக திரு. வசந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று (26/03/19) காலை சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் திரு வசந்தகுமார் சாமி தரிசனம் செய்தார்
கடந்த 24-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments