சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் பதினெட்டாம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து இந்தத் தேர்தலில் சந்திக்க உள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதாக் கட்சியின் திரு பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் இன்று மார்ச் 24ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் திரு பொன் ராதாகிருஷ்ணன் அய்யா வைகுண்டசுவாமியை தரிசனம் செய்தார்.


0 Comments