அய்யா வழி மக்கள் ஜோசியத்தை நம்பலாமா? தோஷ பரிகாரங்கள் செய்யலாமா?
"மந்திரமும் நானானேன் மருந்துமூலி நானானேன்
சந்திரனும் நானானேன் சூரியனும் நானானேன் "
என்பது நம் அய்யா வைகுண்டரின் அருள் நூல் வாக்கு.
இவ்வாசகங்களை பூரணமாக நம்புவோம்,அய்யாவை நினைத்து அவருடைய திருநாமத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வழிபட்டால் எத்தகைய தோஷம் இருந்தாலும்,அது சூரியனைக்கண்ட பனிபோல் மறைந்து போகும்.
"இருபத்திமூன்று தெய்வம் ஈசனெங்கும் வடிவானேன் "
என்பதுபோல அய்யாவுக்குள்ளே தான் அனைத்து கிரகங்களும் அடங்கியுள்ளன.
"வைகுண்டருக்கே பதறி வாழுவதல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்கு புத்திஅயர்ந்து அஞ்சாதுங்கோ"
என்ற அய்யாவின் திருவாக்கை எல்லா அன்புக்கொடி மக்களும் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

0 Comments