சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி,தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்சி பள்ளிகளில் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்து வருகிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சிபிஎஸ்இ 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சாதி முரண்பாடு ஆடை விவகாரம் என்ற தலைப்பில் பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல் இடம் பெற்று இருந்தன.
இதற்கு நாடார் சமூகம் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய பகுதி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் எனவும், அத்த பகுதியில் இருந்து எந்த ஒரு கேள்வியும் தேர்வில் கேட்கப்படும் என்று சிபிஎஸ்சி அறிவித்தது.
அதன்படியே தேர்வில் எந்த ஒரு கேள்வியும், அந்த சர்ச்சைக்குரிய பாடப் பகுதியிலிருந்து கேட்கப்படவில்லை.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்து முற்றிலும் நீக்கம் செய்து புதிய பாடப்புத்தகம் அச்சடிக்க தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி குழு உத்தரவிட்டுள்ளது.
அதன்படியே புதிய பாடப்புத்தகம் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

0 Comments