முட்டப்பதியில் பங்குனி திருவிழா வரும் பங்குனி 8-ம் தேதி (22/03/19) அன்று தொடங்குகிறது
முட்டப்பதி ஐம்பதியில் ஒன்று. இப்பதியில் பங்குனி திருவிழா, பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளி கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
அதுபோலவே , இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வரும் பங்குனி மாதம் 8-ஆம் தேதி (22/03/19) அன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு நாளும் வாகன பவனியும் தர்மங்களும் சிறப்பாக நடைபெற உள்ளது.
திருவிழாவின் 8-ஆம் திருநாள் (29/03/19) அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகன பவனி மற்றும் கலிவேட்டை நடைபெற உள்ளது.
திருவிழாவின் 11-ஆம் திருநாள் (01/04/19) அன்று அய்யா வைகுண்டர் சர்ப்ப வாகன பவனி மற்றும் இரவு முழுவதும் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

0 Comments