அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தின விழா ஊர்வலம் (04/03/19) அன்று சிறப்பாக நடைபெற உள்ளது .
அய்யா வைகுண்டரின் 187- வது அவதார தினமான மாசி 20 (04/03/19) அன்று மாசி ஊர்வலம் சிறப்பாக நடைபெற உள்ளது .
இதை ஒட்டி மாசி 19 (03/03/19) அன்று காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் அவதாரித்த திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் இருந்து வாகன பேரணி புறப்படுகிறது.
அதுபோலவே காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பில் இருந்து மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது.
இந்த இரண்டு வாகன பேரணியும் இரவு நாகர்கோவில் வந்தடையும் .
அன்று இரவு அய்யாவழி சமய மாநாடு நாகர்கோவில் நாகராஜா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது .
மறுநாள் மாசி 20 (04/03/19) அய்யா வைகுண்டர் அவதார தினம் அன்று நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு நோக்கி மாசி ஊர்வலம் நடைபெற உள்ளது.
அனைவரும் வருக !
அய்யா வைகுண்டரின் அருள் நலம் பெறுக !
அய்யா உண்டு

0 Comments