அய்யா வழியை பின்பற்றும் மக்கள் அசைவ உணவு சாப்பிடலாமா ?



        அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழியை பின்பற்றுபவர்கள் சைவ உணவே உட்கொள்ள வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் அறிவுரை .

      உலகில்  உள்ள அனைத்து உயிரினங்கள் இடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் போதனை.

     அய்யா வைகுண்டரின் அவதார காலத்தில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானோர் அசைவ உணவு அருந்தி வந்தனர்.

      அய்யா வைகுண்டரின் போதனைகளை கவரப்பட்ட மக்களிடம்  இருந்த , அந்த பழக்கங்கள் மெல்ல மறையத் துவங்கியது . ஆனால் அய்யாவிற்கு தெரியும் மாற்றம் ஒரே நாளில் வந்து விடாது .

       ஆகவே வாரத்திற்கு இரண்டு நாள் (வெள்ளி , ஞாயிறு ) கிழமைகளில் அசைவ உணவு அருந்தக்கூடாது என அய்யா கட்டளையைப் பிறப்பித்தார்.

     அய்யாவின் கட்டளையை ஏற்ற மக்கள் அந்தக் கட்டளையை பின்பற்றினர்.

      அதுபோலவே பண்டிகை நாட்களிலும் திருவிழாக் காலங்களிலும் அங்குள்ள மக்கள் கடுமையான கட்டுப்பாட்டுடன் அசைவ உணவு அருந்தாமல் இருந்தனர்.


     அதுபோலவே நாமும் சில நாட்களில் மட்டுமே அசைவ உணவு அருந்தாமல் இருக்கிறோம்.


      ஆனால் உண்மையான அய்யாவழி மக்கள் அசைவ உணவை அருந்த கூடாது.

அய்யா உண்டு
      

Post a Comment

0 Comments