உண்மையான தமிழ் கடவுள் நம் அய்யா வைகுண்டர் மட்டுமே. அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழியே உலகின் ஒரே தூய தமிழ் வழிபாடு .
அய்யா வைகுண்டரின் அவதார காலத்திற்கு முன்பும் , அவதார காலத்திலும் உயர் சாதியினர் ஆலயங்களில் சமஸ்கிரத மொழியில் மட்டுமே பூஜைகள் செய்தனர் .
சமஸ்கிருத மொழி தேவர்களின் மொழி எனவும் , அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர்.
ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழியில் அனைத்து நிகழ்வுகலும் தமிழ் மொழியில் மட்டுமே நடைபெறுகிறது.
அய்யா வைகுண்டர் அருளிய புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் ஆகியவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூலாகும்.
அய்யா வழிபாட்டுத்தலங்களில் அய்யா வைகுண்டர் அருளிய தமிழ் வேத மந்திரங்களை , ஒருவர் சொல்ல அதைக் கேட்டு அனைவரும் சொல்கின்றனர் . இதன் மூலம் இறைவழிபாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் வழியே நம் அய்யா வைகுண்டர் அருளிய அய்யா வழி.
உலகின் ஒரே தூய தமிழ் வழிபாடான அய்யா வைகுண்டர் அருளிய அய்யாவழியின் படி செயல்படுவோம் !
தர்மயுக வாழ்வு பெறுவோம் !
அய்யா உண்டு

0 Comments