ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திடுங்கோ கண்ணுமக்கா
- அய்யா வைகுண்டர்
பஞ்சப்பதி / ஐம்பதி :
- சுவாமிதோப்பு பதி
- தாமரைக்குளம் பதி
- முட்டப்பதி
- அம்பலப்பதி
- பூப்பதி
சுவாமிதோப்பு பதி :
சுவாமிதோப்பு பதி , இது ஐம்பதியில் ஒன்று. இது அய்யா வழியின் தலைமைப் பதி.
இப்பதியில் தான் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் தவம் செய்தார்.
இப்பதியில் தான் அய்யா வைகுண்டர் ஏழு அம்மையார்களை திருகல்யாணம் செய்தார்.
இப்பதியில் தான் அய்யா வைகுண்டர் அமைத்த முத்திரிக்கிணறு உள்ளது.
இங்கு அய்யா வைகுண்டர் பயன்படுத்திய கட்டில் முதலான பொருட்கள் உள்ளது.
திருவிழா :
தை முதல் வெள்ளி , வைகாசி இரண்டாம் வெள்ளி மற்றும் ஆவணி முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
திருஏடு வாசிப்பு :
கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.
தாமரைகுளம் பதி :
இது ஐம்பதியில் ஒன்று. அகிலத்திரட்டு அம்மானை எழுதிய அரிகோபால சீடர் பிறந்த ஊரில் அமைந்துள்ளது.
இப்பதியில் தான் , அகிலத்திரட்டு அம்மானை மூல ஏடு பாதுகாக்கப்படுகிறது.
திருவிழா :
சித்திரை மாதம் முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
திரு ஏடு வாசிப்பு:
கார்த்திகை மாதம் 17 நாள் திரு ஏடு வாசிப்பு நடைபெறும்.
முட்டப்பதி:
முட்டப்பதி , இது ஐம்பதியில் ஒன்று.
வாகை பதியில் தவம் செய்த சான்றோர் குல மக்களுக்கு தவபெருமை கொடுத்த பதி. இந்த முட்டப்பதி .
அய்யா வைகுண்டர் இரண்டாம் விஞ்சை பெற்ற இடம் , இந்த முட்டப்பதி.
திருவிழா :
பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
திரு ஏடு வாசிப்பு:
கார்த்திகை மாதம் 17 நாள் திரு ஏடு வாசிப்பு நடைபெறும்.
அம்பலப்பதி :
இது ஐம்பதியில் ஒன்று. அய்யா வைகுண்டர் அருளிய 96 தத்துவங்கள் குறிக்கும் தத்துவக் கொட்டகை இப்பதியில் தான் அமைத்துள்ளது.
இப்பதி அம்பலப்பதி, பள்ளப்பதி , மூலகுண்டப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
பார்வதி , பகவதி , லட்சுமி , மண்டைகாட்டாள் , வள்ளி , தெய்வானை முதலான தெய்வ சக்தியை திருகல்யாணம் என்ற பெயரில் அய்யா ஆற்கொண்ட இடமே , இந்த அம்பலப்பதி .
இப்பதியில் தான் , பஞ்சதேவர்கள் செய்த தவறை அய்யா மன்னித்து , சீவாயுமார்களக மாற்றி தம் பள்ளியறைக்கு வலதுபுறம் இடம் கொடுத்தார்.
திருவிழா :
ஐம்பதி மாதம் முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
திரு ஏடு வாசிப்பு:
பங்குனி மாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு வரை திருஏடு வாசிப்பும் நடைபெறும்.
பூப்பதி :
பூப்பதி ஐம்பதியில் ஒன்று. அய்யா வைகுண்டர் பூமடநாத அம்மையை திருக்கல்யாணம் செய்த இடம். தேவர்கள் பூ மாரி பொழிந்த இடம்.
திரு ஏடு வாசிப்பு :
கார்த்திகை மாதம் 17 நாள் திரு ஏடு வாசிப்பு நடைபெறும்.
அய்யா உண்டு






0 Comments