அய்யா வைகுண்டர் அவதார தினம் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்


     அய்யா வைகுண்டர் அவதார தினம் அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் - அய்யா வழி மக்கள் கோரிக்கை.



 அய்யா வைகுண்டர் அவதார தினம் அன்று கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கடந்த 2012 ஆண்டு முதல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

 இதை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர் அய்யா வழி மக்கள்.

வரும் மார்ச் 4ம் தேதி (மாசி 20) அன்று அய்யா வைகுண்டரின் 187 வது அவதார தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பு பட்டியலில் இது சேர்க்கப்படவில்லை.

எனவே தமிழக முதல்வர் , அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அய்யா வழி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அய்யா உண்டு



Post a Comment

0 Comments