தலைமைப்பதியில் நாளை (28/01/19) தேரோட்டம்

 



     

     சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் நாளை (28/01/19) தேரோட்டம் 




       சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை  திருவிழா
நடைபெற்று  வருகிறது.

        விழாவின் 11-ம் நாளான நாளை  (28/01/19)  அன்று திருதேரோட்டம்.

        இதையொட்டி காலை 10 மணிக்கு அய்யாவுக்கு  சிறப்பு பணிவிடை, 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் வீற்றிருந்து, தேரில் எழுந்தருளல் நடைபெறும்.

        மதியம் 12 மணி அளவில் பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கிறது.

         தேர் கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாக வலம் வந்து மதியம் 2 மணிக்கு வடக்கு வாசல் பகுதிக்கு வரும்.அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுருள் நியமித்து வழிபடுவர்.

        பின்னர் மாலையில் தேர் நிலைக்கு வரும்.

       இரவில் அய்யா ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

      செவ்வாய் கிழமை (29/01/19) அன்று  காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 6.30 மணிக்கு திருகொடி அமர்த்தல் நடை பெறுகிறது.


அய்யா உண்டு


Post a Comment

0 Comments