சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் நாளை (25/01/19) கலிவேட்டை
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 8ம் எட்டாம் நாளான நாளை (25/01/19) கலிவேட்டை நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை மாலை 5 மணியளவில் அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதி வலம் வந்து , முத்திரி கிணற்றின் அருகில் கலிவேட்டையாடுகிறார்.
தொடர்ந்து செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பலிக்கிறார்.
பின்னர் வடக்கு வாசலில் தவகோலத்தில் அய்யா காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இரவு வடக்கு வாசலில் அன்ன தர்மம் நடக்கிறது.
அய்யா உண்டு

0 Comments