சுவாமிதோப்பு தை திருவிழா இன்று (18/01/19) தொடங்கியது


    சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (18/01/19) தொடங்கியது.

    இதனையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. பின்னர் 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்திற்கு பூஜிதகுரு பால. பிரஜாபதி அடிகள் தலைமை வகித்து கொடியேற்றினார்.

       இந்த கொடியெற்ற நிகழ்ச்சியில் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்தும் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.

     கொடியேற்றத்தைத்தொடர்ந்து தொட்டில் வாகன பவனி நடைபெற்றது, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.


      எட்டாம் நாள் திருவிழாவில் அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் திருவிழாவான வரும் 28 -ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

     திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடை , வாகனப்பவனி, மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

அய்யா உண்டு

Post a Comment

0 Comments