தலைமைப்பதியில் தை திருவிழா நாளை (18/01/19) அன்று தொடங்குகிறது


        சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை வைகாசி ஆவணி ஆகிய மூன்று மாதங்களில் 11 நாள் திருவிழா நடப்பது வழக்கம்.

        அதுபோல தை திருவிழா நாளை (18/01/19) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

       இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு கொடிபட்டம் பிரகார வலம் வருதலும் தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது.

      தொடர்ந்து பணிவிடை மற்றும் வாகன பவனி , மதியம் 12 மணிக்கு அன்னதர்மம் , இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி நடக்கிறது.


       இரண்டாம் நாள் இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் அய்யா திருவீதி உலா வருதல் , 3ம் நாள் இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா திருவீதி உலா , 4ம் நாள் கடுவாய் வாகனத்தில் அய்யா திருவீதி உலா, 5ம் நாள் பச்சை சாற்றி சப்பர வாகன பவனி , 6ம் நாள் சர்ப்ப வாகன பவனி , 7ம் நாள் கருட வாகன பவனி , 8ம் நாள் குதிரை வாகன பவனி மற்றும் கலிவேட்டை ,9ம் நாள் அனுமன் வாகன பவனி , 10ம் நாள் இந்திர வாகன பவனி , 11ம் நாள்    தேரோட்டம்  நடைபெறுகிறது.


அய்யா உண்டு

Post a Comment

0 Comments