சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை , வைகாசி , ஆவணி ஆகிய மூன்று மாதம் திருவிழா நடைபெறுகிறது.
தை மாதம் முதல் வெள்ளி , வைகாசி மாதம் இரண்டாம் வெள்ளி , ஆவணி மாதம் முதல் வெள்ளி கிழமை சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறுகிறது.
இந்த திருவிழாவிற்கு கடம்பன்குளத்தில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது .
அய்யாவின் அவதார காலத்தில் சுவாமிதோப்பு பதியில் 11 நாள் திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அப்போது கொடிமர நூல் கயிறு எப்படி தயார்படுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது.
உடனே அய்யா கடம்பன்குளத்தை சேர்ந்த என் மக்கள் நூல் கயிறு கொண்டு வந்து கொடியேற்றத்திருநாளை நடத்தித்தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
அய்யா அப்போது சொன்னது போல் அன்று முதல் இன்று வரை தை, வைகாசி, ஆவணி திருவிழாக்களுக்கு கடம்பன்குளத்தில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது.
அதன் மூலமே கொடியேற்றி திருவிழா நடைபெறுகிறது.
அய்யா உண்டு

0 Comments