கோவையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஊர்வலம்
அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தினம் வரும் மாசி 20 (04/03/19) அன்று அனைத்து அய்யா வழி மக்களால் கொண்டாடப்பட உள்ளது .
இதனை முன்னிட்டு வரும் மாசி 19 அன்று கோவை அய்யா வைகுண்டர் சிவபதியில் அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் நடைபெற உள்ளது .
இந்த ஊர்வலம் மாசி 19 மாலை 4 மணிக்கு கோவை சரவணம்பட்டி பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு அய்யா வைகுண்டர் சிவபதி வந்து அடையும் .
மாலை 6 மணிக்கு உகப்படிப்பு மற்றும் அன்னதர்மம் நடைபெறும் உள்ளது .
மறுநாள் மாசி 20 அன்று காலை 6 மணிக்கு அவதார தினம் சிறப்பு பணிவிடை மற்றும் அன்னதர்மம் .
மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு பணிவிடை மற்றும் அன்னதர்மம்
மாலை 6 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி .
இரவு 8 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும் உள்ளது .
அய்யா உண்டு

0 Comments