திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி
கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ம் தேதி வங்காள விரிகுடா திருச்செந்தூர் கடல் சந்தனவாரிக்குள் மகரக் கருவறையில் , ஆதி நாரயணர்க்கும் திருமகள் மகாலட்சுமிக்கும் பிள்ளையாக சிவன் - பிரம்மா - விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியும் ஒரே மூர்த்தியாக சர்வ அதிபதியாக , நம் அய்யா வைகுண்டர் அவதரித்தார் .
கலியுகம் அழித்து தர்மயுகம் ஆள தம் தந்தையகிய ஆதிநாராயணர்யிடம் மூன்று நாள் விஞ்சை பெற்ற இடம் , இந்த திருச்செந்தூர் .
அய்யா வைகுண்டர் ஆறுமுக கடவுளுக்கு பல அறிவுரைகள் கூறிய இடம் , இந்த திருச்செந்தூர் .
இத்தனை சிறப்பு பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 1900 ஆம் ஆண்டு அன்பு கொடி மக்களால் அவதார பதி அமைக்கப்பட்டது .
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி மாதம் முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும் .
திருவிழா நாளில் தினமும் திருஏடு வாசிப்பு நடைபெறும் .
மாசி மாதம் 19 ஆம் தேதி மாசி ஊர்வலம் திருச்செந்தூர் அவதார பதியில் இருந்தே துவங்கும் .
அய்யா வைகுண்டர் அவதரித்த இடமான , திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் அவதார தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அய்யா உண்டு

0 Comments