சென்னை மாநகரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா ஊர்வலம் (04/03/19) அன்று நடைபெற உள்ளது .
அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தினம் வரும் மார்ச் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது .
இதை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு பழைய வண்ணாரப்பேட்டை தங்கக்கிளி திருமணம் மாளிகையில் இருந்து இரண்டு குதிரை பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆகமத்தை வைத்து , அதை சுமந்து செல்லும் வாகனத்தின் பின் தொடர்ந்து அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் நடைபெற உள்ளது .
இந்த ஊர்வலம் பழைய வண்ணாரப்பேட்டை , திருவொற்றியூர் வழியாக மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி சென்று அடைகிறது.
பின் அய்யா வைகுண்டர் தர்மபதியில் சிறப்பு பணிவிடை , உச்சிப்படிப்பு , அய்யா வைகுண்டர் தாலாட்டு , அன்ன தர்மம் முதலானவை நடைபெற உள்ளது
அய்யா உண்டு

0 Comments