அய்யா வழியை தனிமதமாக அறிவிக்க வேண்டும் - ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ கோரிக்கை
சட்டசபையில் நேற்று அதிமுக உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேசினார் .
கூடங்குளத்தில் அமைய உள்ள 3 மற்றும் 4 வது அனு உலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு , அங்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் .
வள்ளியூரை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்று அமைக்க வேண்டும்.
பீடித் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நாட்டில் பனை மரம் அழிந்து வருகிறது. பனை மரம் தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப்பினைந்தது .
அந்த காலத்தில் பனை ஓலையில் தான் தாலி செய்து அணிவித்திருக்கிறார்கள். இலங்கையில் பனை மரங்களை வெட்டினால் தண்டனை அளிக்கப்படுகிறது.
அதுபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வந்து பனை மரங்களை காக்க வேண்டும் .
அய்யா வைகுண்டரை வழிபடும் மக்கள் அய்யா வழி மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் .
கர்நாடகாவில் லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்கப்பட்டது போல அய்யா வழி மக்களையும் தனி மதமாக அறிவிக்க வேண்டும் .
இதுபோல பல கோரிக்கையை சட்டசபையில் வைத்தார் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ .

0 Comments