இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே அய்யா வழி பதி எது ?
அய்யா வழி பதிகளில் , இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பதி , கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ளது தாமரைக்குளம் பதி தான் .
பதியின் சிறப்புகள் :
1. இப்பதி ஐம்பதியில் ஒன்று.
2. அகிலத்திரட்டு அம்மானை ஏழதய அரிகோபால சீடர் பிறந்த ஊரில் அமைந்துள்ளது, இந்த தாமரைக்குளம் பதி.
3. இது அகிலம் தந்த பதி என்றும் அழைக்கப்படுகிறது.
4. அய்யா வைகுண்டர் விருந்து உண்ட பதி , என்ற சிறப்பு பெற்ற பதி , இந்த தாமரைக்குளம் பதி.
5 . இப்பதியில் தான் , அகிலத்திரட்டு அம்மானை மூலம் ஏடு பாதுகாக்கபட்டு வருகிறது.
6. இப்பதியில் சித்திரை மாதம் முதல் வெள்ளி கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.
7. கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.
அய்யா உண்டு


0 Comments