ஆதலவிளை அய்யா வைகுண்டர் தீபஜோதி ஊர்வலம்



      

    ஆதலவிளை அய்யா வைகுண்டர் தீபஜோதி ஊர்வலம்


     கன்னியாகுமரி மாவட்டம் ஆதலவிளை அய்யா வைகுண்டர் திருநிழல்தாங்கலில் 1993-ம் ஆண்டு முதல் அய்யா வைகுண்டர் அவதார தினம் அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் இருந்து தீபஜோதி ஊர்வலமாக எடுத்து சென்று ஆதலவிளை ஊரில் கிழக்கே அமைந்துள்ளது வைகுண்ட மாமலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது .



     ஒவ்வொரு ஆண்டும் மாசி 19-ம் தேதி அதிகாலை ஆதலவிளையிலிருந்து ஊர்வலமாக மக்கள் புறப்பட்டு சுவாமிதோப்பு சென்று.


       பின் அய்யாவின் பள்ளியறையிருந்து ஆதலவிளை வைகுண்ட மாமலை நோக்கி அய்யா தீபத்துடம் தொடர் ஓட்டம் துவங்கும்.




     இந்த தொடர் ஓட்டமானது சுசீந்திரம் , செட்டிகுளம்  சந்திப்பு , ஒழிகினசேரி , வெள்ளமடம் வழியாக ஆதலவிளை தாங்கள் வந்தடையும்.


     பின் அன்பு கொடி மக்கள் புடைசூழ திருநிழல் தாங்கலில் இருந்து வைகுண்ட தீபம் வைகுண்ட மாமலைக்கு எடுத்து செல்லப்படும். அங்கு இரவு 7 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது.

      மறுநாள் அதாவது மாசி 20 அய்யா வைகுண்டர் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அய்யா உண்டு


     

Post a Comment

0 Comments